பெங்களூரு, கர்நாடக மாநிலம் மைசூருவில் பைக்கின் பின்னால் இரும்பு கூடை கட்டி, அதற்குள் 5 குழந்தைகளை ஆபத்தான முறையில் ஏற்றிச் சென்ற நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சரக்கு போல் ஏற்றிச் செல்லப்பட்ட குழந்தைகள் கர்நாடக மாநிலம் மைசூரு - நஞ்சன்கூடு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த (ஞாயிற்றுக்கிழமை) மாலை, நபர் ஒருவர் தனது 'டிவிஎஸ் எக்ஸ்எல்' பைக்கின் பின் பகுதியில் ஒரு பெரிய இரும்பு கூடையைப் பொருத்தியிருந்தார். பொதுவாகப் பொருட்கள் அல்லது கோழிகளை ஏற்றிச் செல்லப் பயன்படும் அந்த இரும்பு கூண்டுக்குள், 5 சிறு குழந்தைகள் எவ்வித பாதுகாப்புமின்றி அமர வைக்கப்பட்டிருந்தனர். இதுமட்டுமின்றி, மற்றொரு குழந்தை வாகனத்தின் முன் பகுதியிலும் அமர வைக்கப்பட்டிருந்தது. ஒரே பைக்கில் மொத்தம் 6 குழந்தைகளை அந்த நபர் ஏற்றிச் சென்றுள்ளார். விதிமீறலும் சமூக வலைதள ஆவேசமும் வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், கூடைக்குள்ளும் முன்னாலும் இருந்த எந்தவொரு குழந்தைக்கும் ஹெல்மெட்டோ அல்லது அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களோ இல்லை. பின்னால் வந்த வாகன ஓட்டிகள் இதனைத் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். "குழந்தைகளை மனிதர்களாக நடத்தாமல், கோழிகளைப் போல கூண்டில் அடைத்துச் செல்வதா?" என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், அந்த பைக்கின் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது மைசூரு போக்குவரத்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. Last night on the Mysuru–Nanjangud Road: a man carrying five children on a TVS XL two-wheeler, as if transporting a load of chickens. It was Sunday, a busy weekend, and the Ooty main road. Is anyone concerned about the safety of these children? Vehicle No.: KA 09 JU 1459… — ಸನಾತನ (सनातन) (@sanatan_kannada) September 21, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/karnataka-5-children-transported-in-an-iron-cage-packed-like-chickens



