ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ‘உலக சினிமா’ திரையிடல் என்ற சிறப்பான முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் சீனு ராமசாமி. இவரது கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்கள் இன்றளவும் பேசப்படும் படங்களாக உள்ளன. ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ‘உலக சினிமா’ திரையிடல் தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில் “ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு, 'உலக சினிமா' என்ற பிரபஞ்சத்தின் ஜன்னலைத் திறந்து வைத்திருக்கிறீர்கள். இந்தச் சிறப்பான முன்னெடுப்பிற்கு என் மனமார்ந்த பாராட்டுகள். உலக சினிமா என்பது திரையில் ஓடும் வாழ்வின் கண்ணாடி, மானுடத்தின் பாடம். உலக சினிமா ரசனைக் கல்வி என்பது பாடத்திட்டமாக மட்டுமல்லாமல், நம் கல்வி முறையில் ஒரு பண்பாடாகவே வேரூன்ற வேண்டும் எனத் தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திட்டத்தை அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி, உலக சினிமா ரசனைக் கல்வியைத் தாங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உலக சினிமா வழியாக மாணவர்களின் படைப்பாற்றல், உலகளாவிய பார்வை மற்றும் பன்முகத்தன்மையைச் செதுக்கும் இந்த மகத்தான முன்னெடுப்பு, நம் கல்வி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும்.உங்கள் அர்ப்பணிப்புக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார். மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களே, என் இதயபூர்வமான நன்றிகள். ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு, 'உலக சினிமா' என்ற பிரபஞ்சத்தின் ஜன்னலைத் திறந்து வைத்திருக்கிறீர்கள். இந்தச் சிறப்பான முன்னெடுப்பிற்கு என் மனமார்ந்த பாராட்டுகள். உலக… — Seenu Ramasamy (@seenuramasamy) July 20, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/director-seenu-ramasamy-praises-the-minister-of-school-education



