கோவை, ஓணம் பண்டிகையையொட்டி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது குறித்து பாலக்காடு ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (எண் 06575) மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயில் இரவு 12.58 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையம் வரும். மறுமார்க்கமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் பெங்களூரு சிறப்பு ரெயில் (எண் 06576) மறுநாள் காலை 5.15 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும். இந்த ரெயில் போத்தனூருக்கு இரவு 9.30 மணிக்கு வரும். இதேபோல், ஆகஸ்டு 28-ந் தேதி மாலை 4.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பெங்களூரு -திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (எண் 06579) மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக 29-ந் தேதி தேதி மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் - பெங்களூரு சிறப்பு ரெயில் (எண் 06580) மறுநாள் காலை 5.15 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும். இந்த ரெயில் வர்கலா, கொல்லம், சாஸ்தான்கோட்டை, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-to-bengaluru-via-podanur




