சென்னை, பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், பா.ஜ.க.வில் இருந்து விலகி 'வீ த லீடர்ஸ்' என்ற இயக்கத்தை நிறுவினார். அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தின் முதல் மாநாடு கடந்த 12-ந்தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. ‘போதையில்லா தமிழகம்’ என்ற பெயரில் நடைபெற்ற விழிப்புணர்வு மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் 2-வது மாநாடு வரும் 26-ந்தேதி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருச்செந்தூரில் நடைபெற இருந்த மாநாடு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இயற்கை மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு சார்ந்த மாபெரும் சமூகநல நிகழ்வு வரும் ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் நடைபெறும் எனவும், இந்த சுற்றுச்சூழல் நிகழ்வு குறித்த தேதி, இடம் உள்ளிட்ட தகவலக்ள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ‘வீ த லீடர்’அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-we-the-leaders-conference-scheduled-to-be-held-in-tiruchendur-has-been-cancelled




