துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் மோதி வருகின்றன. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன இந்தியா - பாகிஸ்தான் இந்நிலையில் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் மோதி வருகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் 55 ரன்களுக்கு ஆல் அவுட் அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் பாகிஸ்தான் 18.1 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷாவல் அதிகபட்சமாக 14 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்ரீ சரணி, பிரேமா அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-india-brilliant-bowling-pakistan-all-out-for-55-runs




