திருவனந்தபுரம், கேரளம் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் 2016 பிப்ரவரி வரை தலைமை செயலாளராக இருந்தவர் ஜிஜி தாம்சன். கேரளப்பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்கு மார் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து உள்ளார். அதாவது கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் டெல்லிக்கு ஒன்றாக விமானத் தில் பயணித்தபோது, ஜிஜி தாம்சனிடம் பேசிய ஞானேஷ் குமார், 'தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின், பா.ஜனதாவில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுங்கள். அதில் வெற்றி பெற் றால் மத்திய மந்திரி ஆகலாம்' என்று கூறியுள்ளார் இதை தற்போது தெரிவித்துள்ள ஜிஜி தாம்சன், ஞானேஷ்குமாரின் இந்த பரிந்துரையை தான் நிராகரித்ததாகவும், தேர்தல் அரசியலில் ஈடுபடும் எண்ணும் தனக்கு இல்லை என மறுத்ததாவும் கூறியுள்ளார். ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரியாக இருந்து கொண்டு ஞானேஷ்குமார் இப்படி பேசியது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் ஜிஜி தாம்சன் கூறியுள்ளார். தலைமை தேர்தல் கமிஷனர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அவரது இந்த பா.ஜனதா பாசம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியிருப்பது அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/did-gyanesh-kumar-advise-the-former-chief-secretary-of-kerala-to-contest-on-behalf-of-the-bjp




