தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் உள்ள கோவிலின் பூஜையை அவமதித்த புகார் தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் நடிகர் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு செய்தனர். சமூக வலைதளங்களில் வீடியோ தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் உச்சினிமகாளி அம்பாள்-ஸ்ரீபட்டறை அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டுமானப் பணிகள் குறித்த சிறப்பு பூஜையை, மாந்திரீகம் செய்வது போல் சித்தரித்து நடிகர் ஜி.பி.முத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. கோவில் பூஜையை அவமதித்த நடிகர் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டதாக கோவில் கமிட்டி தலைவர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் நடிகர் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-filed-against-actor-gpmuthu-for-insulting-temple-worship




