சென்னை, தமிழகத்தில் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வினால், பண்டிகை கால செலவை எதிர்கொள்ள முடியாமல் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது தமிழகத்தில் மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி, சமையல் எண்ணெய், பூண்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த இரண்டு மாதங்களில் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் வேளையில், இந்த விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பெரிதும் பாதிக்கும். ரூ.300-ஐ தொட்ட மிளகாய் சமையலில் காரத்திற்கு முக்கியமாக சேர்க்கப்படும் மிளகாய் வற்றலின் விலை கடந்த சில வாரங்களாகவே ஏறுமுகமாக உள்ளது. கடந்த மாதம் சந்தையில் ஒரு கிலோ 220 ரூபாய்க்கு விற்கப்பட்ட மிளகாய் வற்றல், தற்பொழுது தரத்திற்கு ஏற்ப 270 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு மேல் வரை விற்று மக்களை அதிர வைத்துள்ளது. இதேபோல், குழம்புத்தூள் அரைக்க பயன்படும் தனியாவின் விலையும் கிலோ 150 ரூபாயில் இருந்து உயர்ந்து, தற்பொழுது 220 ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டு மடங்கு உயர்ந்த பூண்டு விலை மளிகை பொருட்களிலேயே மிக கடுமையான விலை உயர்வை சந்தித்திருப்பது பூண்டுதான். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த பூண்டின் விலை, தற்பொழுது கிலோ 280 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பூண்டின் விலை மிக குறுகிய காலத்தில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது, நடுத்தர குடும்பத்து இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர். பாமாயில் விலை இதேபோல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சந்தையில் லிட்டர் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பாமாயில் தற்பொழுது லிட்டர் 185 ரூபாயாக அதிகரித்துள்ளது. இரட்டிப்பான வெல்லம் விலை! பண்டிகை காலங்களில் இனிப்புகள் செய்ய இல்லத்தரசிகள் அதிகம் வாங்கும் வெல்லத்தின் விலை கடந்த மாதம் வரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்பொழுது 100 ரூபாயாக உயர்ந்து இரட்டிப்பாகியுள்ளது. இதேபோல், கடந்த மாதம் கிலோ 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட முந்திரி பருப்பு தற்பொழுது 950 ரூபாயாகவும், முன்பு 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாதாம் பருப்பு தற்பொழுது கிலோ 1,200 ரூபாயாகவும் தடாலடியாக உயர்ந்து இல்லத்தரசிகளைத் திகைக்க வைத்துள்ளது. ஆறுதல் தரும் சர்க்கரை விலை மற்ற அனைத்து இனிப்பு பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே போகும் வேளையில், சர்க்கரை விலை மட்டும் சரிவை சந்தித்துள்ளது. வெளிச்சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ 70 ரூபாய் வரை எகிறியிருந்த சர்க்கரையின் விலை, தற்பொழுது குறைந்து கிலோ 15.55 ரூபாயாக குறைந்துள்ளது. கவலை அளிக்கும் அரிசி விலை ஏழை எளிய மக்களின் அன்றாட உணவான அரிசியின் விலையும் கிலோவுக்கு 8 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஏற்பட்ட இந்த விலை உயர்வால், மொத்த சந்தையில் 26 கிலோ கொண்ட சாப்பாடு அரிசி மூட்டையின் விலை ரகத்திற்கு ஏற்ப 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. முன்பு 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி மூட்டை தற்பொழுது 1,500 ரூபாயாகவும், 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட உயர் ரக அரிசி மூட்டை தற்பொழுது 2,000 ரூபாயாகவும் உயர்ந்து நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டை தலைகீழாக மாற்றியுள்ளது. முக்கிய காரணம் அரிசி விலை உயர்க்கு முக்கிய காரணம் நெல் வரத்து குறைந்தது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு அதிக அளவில் அரிசி வருகிறது. அந்த மாநிலங்களில் விளைச்ச குறைந்துள்ளதால் தமிழகத்துக்கான வரத்தும் குறைந்துள்ளது. வரத்து குறைவு இதனால் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. புதிய அரிசி வரத்தை தொடங்கும் போது தான் விலை குறையும் என்று அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர். மளிகை பொருட்களின் விலை மட்டுமல்லாது காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட் மற்றும் பீன்ஸ் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. இவற்றின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளன. ரேஷன் கடைகள் தக்காளி, உருளைக்கிழங்கு விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளதாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர். மளிகை அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மாதாந்திர செலவு அதிகரிக்கிறது. இதனால் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. பொருட்களை போதுமான அளவு வாங்க முடியவில்லை. வருகின்ற பண்டிகை காலங்களில் இது பொதுமக்களை அதிகளவு பாதிக்கும் என்பதால் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-essential-grocery-prices-surge-housewives-anxious



