சென்னை, சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க என 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து வருகிற 16-ந்தேதி காலை தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவிலும், அதன்பின்னர் தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நடைபெறும் நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும், தொடர்ந்து டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவிலும் பங்கேற்கிறார். சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் அதன்பின்னர் 17-ந்தேதியன்று சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வருகிறார். பின்னர் அங்கு நடைபெறும் பட் டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதையடுத்து தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-a-two-day-trip



