சென்னை, பள்ளி கல்வித்துறை சார்பில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்க ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கையேடு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதுபற்றி கல்வித்துறை தகவலாக வெளியிட்டிருக்கிறது. அதன்படி, குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை புரிந்து கொள்ளுதல், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் குறித்த ஒரு பார்வை. குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள்-வெளிப்படுத்துதலை கையாளுதல், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கையாளுபவர்களுக்கான விழிப்புணர்வு ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளது. அறிவுரைகள் மேலும், ஆசிரியர்கள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை எவை? என்பது குறித்தும் அதில் விரிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தலைமை ஆசிரியர், முதல்வர், பள்ளி பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுவிடம் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகாரை அளிக்கும் போது குழுவில் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். குற்றச்சாட்டை போலீசார் மட்டுமே விசாரிக்க வேண்டுமே தவிர பள்ளி நிர்வாகம் விசாரிக்கக் கூடாது. போலீஸ் சீருடை அணிந்து பள்ளி வளாகத்துக்குள் நுழையக்கூடாது. எந்த ஒரு பள்ளியும் பெற்றோர், பாதுகாவலருக்கு முதலில் தெரிவிக்காமல் பள்ளி வளாகத்துக்குள் மாணவரை விசாரிக்க போலீசாரை அனுமதிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-handle-sexual-harassment-complaints-school-education-department-advises-teachers




