புதுடெல்லி, அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோசாபல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் திருடப்பட்டது லட்சக்கணக்கான மக்களுக்கும், கடவுள் ராமரின் பக்தர்களுக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தால் அதிருப்தியும், கவலையும் அடைந்துள்ளோம். ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை தீர்த்த சேத்திர அறக்கட்டளை வேண்டுகோளின்படி உபி மாநில அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. விசாரணையில் குற்றவாளி என கண்டறியப்படும் ஒவ்வொருவரும் நீதியின்முன் நிறுத்தப்படுவதுடன், சட்டப்படி கடுமையான தண்டிக்க வேண்டும். இந்த சம்பவத்தை மிகவும் கண்டிக்கத்தக்கதாக கருதி, அனைத்து குறைபாடுகளையும் சரி செய்ய தேவையான நடவடிக்கைகளையும் அறக்கட்டளை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அயோத்தி ராமர் கோயில் மீதான லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும், பற்றையும் அசைக்க முடியாததாக இருப்பதை உறுதி செய்வது இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் ஆகும். தற்போது நிலவும் குழப்பமும், நிச்சயமற்ற தன்மையும் முடிவுக்கு வர வேண்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/ram-temple-financial-irregularities-rss-urges-strict-action-against-culprits




