சென்னை, தீரன் சின்னமலை நினைவு தினத்தை முனிட்டு மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக, மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:- புகழஞ்சலி ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை நினைவு நாள். எத்தனை முறை எத்தகு படைகளைக் கொண்டு தாக்கியும் வெற்றி கொள்ள முடியாத பெருவீரனாகப் போரிட்டவர் தீரன் சின்னமலை. திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி. நேரடியாக எதிர்கொள்ள இயலாத எதிரிகள் சூழ்ச்சியால் அவரைத் தூக்கிலிட்டாலும் அவர் புகழைத் தமிழ்நாடு போற்றிக் கொண்டே இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-mk-stalin-pays-tribute




