சென்னை, சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில், தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், இதழியல் துறைக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது முழு உருவச் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. சிலை அருகே அவரது உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் விழா நடைபெற்றதால் மயிலாட்டம், காளையாட்டம் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும். இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவருமான சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில், தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், இதழியல் துறைக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன். வாழ்நாள் முழுவதும் உழைத்திட்ட "தமிழர் தந்தை" இதழியல் துறையில் உயிரோட்டமான எளிய தமிழ்நடையை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதனும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் சி.பா.ஆதித்தனார் அவர்கள். தமிழ்நாடு அரசின் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்த அவர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்தபோது, சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் தினம் ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கும் நடைமுறையைக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்திட்ட "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ் நம் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-fame-of-sp-aditanar-will-endure-forever-in-our-land-chief-minister-vijay-pays-tribute




