Full artikkel
சமூக பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ், புதிய 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 2026'-ஐ தற்போது அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. இது EPF திட்டம், 1952-க்கு மாற்றாகும். இந்தப் புதிய திட்டத்தின் படி, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் சில முக்கிய காரணங்களுக்காக தங்களது வைப்பு நிதி கணக்கில் இருந்து பகுதிப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். பகுதி பணம் என்றால், ஊழியர்கள் தங்களக்கு தகுதியான மொத்தப் பிஎஃப் தொகையில் (Eligible Member Balance) 75 சதவிகித பணத்தை முக்கிய தேவைகளுக்காக எடுத்துகொள்ளலாம். பி.எஃப்PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! - தெரிந்து கொள்ளுங்கள் மீதி 25 சதவிகித தொகையை கட்டாயம் பி.எஃப் கணக்கில் வைத்திருக்க வேண்டும். அதாவது, ஒருவருக்கு பிஎஃப் கணக்கில் தகுதியான தொகையாக ₹1 லட்சம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். புதிய திட்டத்தின் படி, இதில் ரூ.25,000-ஐ பி.எஃப் கணக்கிலேயே எப்போதும் வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள ரூ.75,000 தொகையை தற்போதைய விதிகளுக்கு உட்பட்டு பகுதிப் பணமாக எடுத்துக்கொள்ள முடியும். சரி... என்னென்ன காரணங்களுக்காக பி.எஃப் பணத்தை பாதியில் எடுக்க முடியும்? > தனது மற்றும் குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகளுக்கு, > கல்விச் செலவுகள் (இது உறுப்பினர் காலத்தில் 10 முறை மட்டுமே எடுக்க முடியும்) > திருமணம் (இது உறுப்பினர் காலத்தில் 5 முறை மட்டுமே எடுக்க முடியும்) > வீடு வாங்குதல், வீடு கட்டுவது, வீடு மராமத்து, வீட்டுக் கடன் போன்றவைக்கு, பி.எஃப்Gold: தங்கம் விலை ஏன் தொடர்ந்து சரிகிறது? - இப்போது ETF-களை விற்றுவிடலாமா? > முக்கிய சூழல்களுக்கு > வேலையில் இருந்து வெளியேறினால் (இது ஒரு நிதி ஆண்டிற்கு அதிகபட்சம் 2 முறை பணம் எடுக்க முடியும்) வேலையில் இருந்து வெளியேறுவதை தவிர, மேலே கூறியுள்ள அனைத்து காரணங்களுக்கும் வருங்கால வைப்பு நிதி உறுப்பினராக சேர்ந்து 12 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். வேலையில் இருந்து வெளியேறினால் உறுப்பினர் ஆகி 12 மாதங்கள் முழுவதும் நிறைவடையவில்லை என்றாலும், பணம் எடுத்துக்கொள்ளலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




