கோவை, உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து போராட்டம் என்ற பெயரில் இன்று திமுகவினர் அரங்கேற்றும் அராஜகங்கள் கடும் கண்டனத்திற்குரியவை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- கண்டனம் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து போராட்டம் என்ற பெயரில் இன்று திமுகவினர் அரங்கேற்றும் அராஜகங்கள் கடும் கண்டனத்திற்குரியவை. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், காவல்துறையினரையே அச்சுறுத்தும் வகையில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் இந்த செயல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை. சட்டம் தனது கடமையைச் செய்யும் போது அதற்கு மதிப்பளிக்காமல் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் அரசியலை முன்னிறுத்துவது திமுக இன்னும் திருந்தவில்லை என்பதற்கே சான்று. பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசும் தங்களது கட்சியினரைக் கண்டிக்காமல் மௌனம் காக்கும் திமுக மகளிர் அணி, பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் தார்மீக உரிமையையே இழந்து விட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-anarchy-in-the-name-of-protest-vanathi-srinivasan-condemns




