ராணிப்பேட்டை, திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு, முகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளைய டித்து சென்றனர். முகமூடி கொள்ளையர்கள் ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தில் வசிப்பவர் சுப்பிரமணி மனைவி அமுதா (வயது 45). சுப்பிரமணி இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால் அமுதா தனியாக வசித்து வந்தார். விவசாய கூலி வேலை செய்து கொண்டு, கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். வீட்டின் பின்புறம் மாடுகளை கட்டிவைத்திருப்பதால் அமுதா இரவில் பின்பக்க கதவை திறந்து வைத்திருப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமுதா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். 10.30 மணி அளவில் 25 வயது மதிக்கத்தக்க 3 நபர்கள் முகமூடி, கையுறை அணிந்து கொண்டு பின்வாசல் வழியாக அமுதாவின் வீட்டுக்குள் புகுந்தனர். நகை, பணம் கொள்ளை அவர்கள் அமுதாவின் முகத்தை துணியால் மூடி, அங்கிருந்த கயிறை எடுத்து கை, கால்களை கட்டினர். கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டி, ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டதுடன், பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தையும் எடுத்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர். பின்னர் அமுதா தானாகவே கட்டை அவிழ்த்துக் கொண்டு சற்று தூரத்தில் உள்ள வீட்டுக்காரரிடம் நடந்ததை கூறி உள்ளார். உடனே அவர் ஆரணி மெயின் ரோட்டில் பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் தெரிவித்தார். திமிரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் லோகேஷ், தனிப்பிரிவு போலீஸ்காரர் ரகுராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். போலீஸ் விசாரணை மேலும் இந்த சம்பவம் குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிந்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அமுதா வீட்டில் 5 கறவை மாடுகள் திருட்டு போய் இருக்கிறது. இது குறித்து திமிரி போலீசில் புகார் அளித் தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-living-alone-at-home-tied-up-jewelry-and-cash-stolen




