தூத்துக்குடி, தூத்துக்குடி பீச்ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இதுகுறித்து தூத்துக்குடி நகர் கோட்ட மின்பகிர்மான வட்டச் செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட பீச்ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (16.7.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் இனிகோநகர், ரோச்சு காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச்ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள உப்பளப் பகுதிகள், லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பயர் தெரு, மணல் தெரு, பெரெயரா தெரு, விக்டோரியா தெரு, பெரிய கடைதெரு, ஜார்ஜ் ரோடு, கணேசபுரம், பாத்திமாநகர், இந்திராநகர், புல் தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ்நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம், பிராப்பர், சந்தை ரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2-வது தெரு, CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கீள்புரம், லோகியாநகர், ராஜபாண்டிநகர், பெரியசாமிநகர், எம்.ஜி.ஆர்.நகர், முடுக்குக்காடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். எனவே இந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த மின்தடை நேரத்தை கருத்தில் கொண்டு தங்களது மின் தேவைகளைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-3




