'சிறுபான்மையினர் ஆணைய பதவி.' சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் இருக்கிறார். அந்த அந்தஸ்த்தில் இருப்பவர் தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல்ரீதியான கருத்துகளை பேசக்கூடாது அவரின் நியமனத்தில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால், அவர் அரசியல் விவாதங்களில் சட்டரீதியாக கலந்துகொள்ளக்கூடாது. அப்படி தொடர வேண்டுமென நினைத்தால் அவரை சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்குங்கள். - ஆஸ்டின், திமுக எம்.எல்.ஏ அமைச்சர் நிர்மல் குமார் - தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வது தனிப்பட்ட விருப்பம். திண்டுக்கல் லியோனி பாடநூல்கழகத் தலைவராக இருந்தார். அவர் எப்போதும் நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சியினரை திட்டிக் கொண்டுதான் இருப்பார். 'மேட்டூர் அணை விவகாரம்.' கோவி.செழியன் - மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? அமைச்சர் ஆனந்த் - விரைவில் நல்ல செய்தி வரும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்கள் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு வறட்சியில் இருக்கின்றன. இப்போது அணையில் தண்ணீர் போதுமான அளவு இருக்கிறது. எப்போது அணையை திறப்பீர்கள்? - மாரிமுத்து 'மேட்டூர் அணை விவகாரம்!' சட்டமன்றத்தில் உதயநிதி பேச்சு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "கர்நாடக மாநிலத்தில் அந்த மாநில வனத்துறையால் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களின் உடற்கூராய்வு ரிப்போர்ட் இப்போது வெளியாகியிருக்கிறது. அதில் மூன்று பேரும் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுசம்பந்தமாக தமிழக அரசு என்ன செய்திருக்கிறது? தென் மாநில நிர்வாகக்குழு கூட்டத்துக்கு கர்நாடக முதல்வர் வந்தபோது அவரிடம் தமிழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதா?" உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகளை இந்த Live Blog-ல் தொடர்ந்து காணலாம்; இணைந்திருங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/live-events-of-tamilnadu-assembly-today-aug-25-2026



