தென்காசி, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று, ரெயில்வே கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உயர் தடுப்பு கம்பியில் சிக்கியது. மேலும் அது போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி என்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 30 நிமிடங்கள் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. உயர் தடுப்பு கம்பியில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மேல் பகுதியில் இருந்த ஒலிபெருக்கி சிக்கிய நிலையில், ஊழியர்கள் அதைத் திருப்பி சரிசெய்து வாகனத்தை மீட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. தொடர்ந்து போக்குவரத்து வழக்கம்போல் சீரானது. அந்த பகுதியில் மேம்பாலப் பணிகள் மந்தமான வேகத்தில் நடைபெறுவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-near-tenkasi-as-ambulance-gets-stuck-in-railway-crossing-barrier




