கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தவறிய தவெக என்று தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது திமுக. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சர்ச்சைக்குறிய விதமாக விமர்சிப்பது போல ஆபாசமாகப் பேசியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதியின் இந்தப் பேச்சிற்குத் தவெக, அரசியல் தலைவர்கள் எனப் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவெக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலின்"இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" - உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு உதயநிதியின் பேச்சிற்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே போகின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள உதயநிதியின் வீட்டிற்குப் போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காவல் உதயநிதி ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளதா அல்லது த. வெ. க நடத்தி வரும் போராட்டங்களின் பாதுகாப்பின் காரணமாக இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை. உதயநிதி கைதா? இந்தக் காவல் அதிகரிப்பு உதயநிதி ஸ்டாலின் கைதிற்காகக் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே விஜய் குறித்துச் சர்ச்சையாகப் பேசியதாக தூத்துக்குடி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருந்தனர். இப்போது இந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலினும் சேர்வாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்குப் பாதுகாப்பு அதிகரிப்பு. கைது என்கிற பேச்சு வருவது அரசியல் களத்தை இன்னும் சூடாக்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/security-tightened-at-udhayanidhis-home-amid-arrest-speculation




