உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைவரான சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் (Lawrence Wong) ஆண்டுச் சம்பளம் தற்போது சுமார் 64 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவரது ஆண்டுச் சம்பளம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக அதிகரித்திருக்கிறது. இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.26.9 கோடி. இந்தச் சம்பள உயர்வு மூலம் மீண்டும் உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவர் என்ற இடத்தை லாரன்ஸ் வோங் தக்கவைத்திருக்கிறார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அரசாங்கத்தில் திறமையான மற்றும் தகுதியான தலைவர்களை ஈர்க்கவும், ஊழலைத் தடுக்கவும் இந்தச் சம்பள உயர்வு அவசியமானது என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. நாட்டின் தற்போதைய வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு பொதுமக்களிடையே இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. "என் குடும்பத்திற்கு நன்றி" - மேடையில் பேசிய ஜேசன் சஞ்சய்- 'TVK, TVK.' என ஆரவாரம் செய்த மாணவர்கள் இதனிடையே இந்தச் சம்பள உயர்வு மூலம் தனக்குக் கூடுதலாகக் கிடைக்கும் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப் போவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்திருக்கிறார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மேலும், அந்நாட்டின் மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளமும் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. "பெருவெள்ளத்திற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா காரணம்; இழப்பீடு வேண்டும்" - குற்றம்சாட்டும் நேபாள அரசு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/governance/lawrence-wong-is-worlds-highest-paid-prime-minister




