தஞ்சை விசாரணை நிறைவடைந்த நிலையில் காவல் நிலைய ஜாமீனில் உதயநிதி விடுவிக்கப்பட்டார். சர்ச்சை பேச்சு தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தவெக மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர். தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. அதாவது, பகைமை, கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீலங்கரையில் கைது இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து உதயநிதியை தஞ்சை மாவட்ட போலீசார் இன்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூருக்கு அழைத்து செல்ல புறப்பட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. திமுக தொண்டர்கள் போராட்டம் இதனிடையே உதயநிதி ஸ்டாலினின் கைதை தொடர்ந்து திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை எனப் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பல இடங்களில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டது. தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் திமுகவினர் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் உதயநிதி செங்கிப்பட்டி அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் உதயநிதி வர மறுப்பு தெரிவித்தார். மேலும் என் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு போடப்பட்டுள்ளதால் அங்கு தான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின், செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார். உதயநிதியை போலீசார் செங்கிப்பட்டி காவல் நிலையம் அழைத்து வருவதற்கு முன்பு திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் குவிந்தனர். தஞ்சை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை விசாரணைக்காக காவல் வாகனத்தில் இருந்து இறங்கிய உதயநிதி, அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே கையசைத்தார். தொடர்ந்து விசாரணைக்காக காவல்நிலையம் உள்ளே சென்றார். தஞ்சை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் ஆய்வாளர் மணிகண்டன் உதயநிதியிடம் விசாரணை நடத்தினார். ஜாமீனில் விடுவிப்பு காலை 11 மணிக்கு கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் மாலை 6.45 முதல் விசாரணை நடைபெற்றது.செங்கிப்பட்டியில் வைத்து உதயநிதியிடம் மாலை 6.45 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8.10 மணி வரை நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னையில் இருந்து காவல் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட உதயநிதி தற்போது காரில் புறப்பட்டார். காவல்நிலையம் முன்பு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். காரில் இருந்து திருச்சி செல்லும் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். நாளை பட்ஜெட் கூட்டத்தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையை இன்றே முடித்து உதயநிதியை விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/investigation-complete-udhayanidhi-stalin-released




