மான்செஸ்டர், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்துசெய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் அறிமுகமாகி உள்ளார். அதன்படி தொடக்க வீரராக அவர் களமிறங்கினார். வைபவ் சூர்யவன்ஷி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், இன்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக இளம் வயதில் களமிறங்கியவர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். *சூர்யவன்ஷி - 15 வயது. * சச்சின் - 16 வயது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/vaibhav-suryavanshi-breaks-sachins-record




