மெக்காய், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையே கடந்த 13ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்காளதேசம் வரலாறு படைத்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெக்காய் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. வங்காளதேசம் 64 ரன்களுக்கு ஆல் அவுட் இதையடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி ஆஸ்திரேலியாவின் மிரட்டல் பந்து வீச்சால் 64 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலியா 165/8 இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கிரீன் 51 ரன்களுடனும், நாதன் லயன் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தை விட 101 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வங்காளதேசம் தரப்பில் அந்த அணியின் ஷோரிபுல் இஸ்லாம் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/bangladesh-vs-australia-test-australia-165-8-at-stumps-day-one




