அட்லாண்டா, அட்லாண்டாவில் நடைபெற்ற பிபா உலகக் கோப்பை ‘சுற்று 16’ நாக்-அவுட் போட்டியில், எகிப்துக்கு எதிராக பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி, உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் இரண்டு பெனால்டிகளை தவறவிட்ட முதல் வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். முதல் வீரர் இப்போட்டியின் 20-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை கோலாக மாற்ற மெஸ்சி முயன்ற நிலையில், எகிப்து கோல்கீப்பர் முஸ்தபா ஷோபீர் பந்து செல்லும் திசையை சரியாக கணித்து அற்புதமாக தடுத்தார். இதற்கு முன்பு ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியிலும் மெஸ்சியின் பெனால்டி முயற்சி கோல் கம்பத்திற்கு வெளியே சென்றிருந்தது. இதன் மூலம் ஒரே உலகக் கோப்பை தொடரில் இரண்டு பெனால்டி வாய்ப்புகளை தவறவிட்ட முதல் வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். காலிறுதி இருப்பினும், இப்போட்டியில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இதில் ஒரு கோலை மெஸ்சி பதிவு செய்தார். பெனால்டி வாய்ப்பை தவறவிட்டு தேவையற்ற சாதனையை பதிவு செய்திருந்தாலும், முக்கிய தருணத்தில் கோலும் அசிஸ்டும் வழங்கி அணியின் வெற்றியில் மெஸ்சி முக்கிய பங்காற்றினார். அர்ஜென்டினா காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/football/lionel-messi-makes-unwanted-fifa-world-cup-record-with-penalty-miss-against-egypt-becomes-first-player-to




