ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் இதுவரை அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அதுபோன்ற திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் போலீஸாகப் பணியாற்றி வரும் இரு பெண்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு புனே மாவட்டம் ஆகும். மற்றொருவருக்கு மகாராஷ்டிராவின் வடக்கு பகுதியாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக இரண்டு பேரும் புனே வந்தனர். அப்போது அவர்கள் ஒன்று சேர்ந்து வேலை தேட ஆரம்பித்தனர். அதோடு அவர்கள் போலீஸ் வேலைக்கும் தேர்வு எழுதினர். இத்தேர்வில் இரண்டு பேருக்கும் புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் வேலை கிடைத்தது. இதனால் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து ஒரின தம்பதியாக சேர்ந்து வாழ்ந்தனர். தங்களது இந்த இணைப்பைச் சட்டப்பூர்வமாக மாற்ற இரண்டு பேரும் முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான அழைப்பிதழ்களையும் அச்சடித்தனர். தங்களுக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இருவரும் திருமண அழைப்பிதழைக் கொடுக்க ஆரம்பித்தனர். இறுதியில் திருமணத்திற்கு விடுமுறை வேண்டும் என்று கோரி திருமண அழைப்பிதழுடன் தங்களது உயர் அதிகாரியைச் சந்தித்தனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது அதன் பிறகுதான் போலீஸ் நிலையத்தில் அனைவருக்கும் தெரிய வந்தது. அதோடு இந்த விவகாரம் புனேயைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்திற்கும் தெரியவந்தது. அவர்கள் உடனே போலீஸ் நிலையத்திற்கு வந்து தகராறு செய்தனர். ஆனால் அங்கு இருந்த போலீஸார் இரு பெண்களின் முடிவில் தங்களால் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இருவரும் வரும் 30ம் தேதி திருமணம் செய்து கொள்ள தேதி குறித்து இருந்தனர். ஆனால் அதற்கான நேரம் நெருங்க நெருங்க திருமணத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரி அவர்கள் இரண்டு பேருக்கும் நெருக்கடி அதிகரித்தது. குடும்பத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரின் நெருக்கடி காரணமாக இரண்டு பெண்களும் தங்களது திருமணத்தை ரத்து செய்துவிட்டனர். ஆனால் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது என்று அப்பெண்கள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/love-found-while-job-hunting-lesbian-police-officers-call-off-wedding-at-last-minute




