சென்னை, தங்கம் விலை தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 3-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ. 14,240-க்கும் விற்பனையானது. அதேபோல, 4-ந்தேதியும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன் தினம் தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,530-க்கும், கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. விடுமுறை தினம் என்பதால் நேற்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், வார தொடக்கமான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,130க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 5-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-dropped-at-the-start-of-the-week-what-is-the-situation-today




