சூரி நாயகனாக நடித்து வெளியான ‘மண்டாடி’ திரைப்படத்துக்கு 500-க்கும் அதிகமான திரைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. கதாநாயகனாக உயர்ந்த சூரி ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானவர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. நடிகர்கள் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வைரலான பாடல்கள் இந்த படத்திலிருந்து ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ என்ற அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் நடிகர் சூரியின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. திரைப்படத்தின் வசூல் மீனவர்களின் வாழ்வியலையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், இரண்டு நாட்களில் ரூ 15 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுமையான கதைகளத்தால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ‘மண்டாடி’ படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்தப் படம் விமர்சகர்களிடையே பாராட்டுகளையும் பெற்றுள்ளது. படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கீடு இந்த நிலையில், ரசிகர்களின் வரவேற்புகளை தொடர்ந்து ‘மண்டாடி’ படத்துக்கு உலகம் முழுவதும் 500-க்கும் அதிகமான திரைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். Not just capturing attention, but capturing screens! 500+ screens added for! It’s purely a Mandaadi takeover! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/additional-screens-allocated-for-sooris-mandaadi-film




