ஒகேனக்கல், கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவி ரத்தை பொறுத்து அந்த மாநில அரசு தண்ணீரை அதிகரித்தும், குறைத் தும் திறந்து விட்டு வருகிறது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வ ரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினா டிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தொடர் சரிவு தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி செய்தும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரத்து 808 அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 543 கனஅடியாக குறைந்தது. தண்ணீர் திறப்பு அதிகரிப்பு நேற்று முன்தினம் 78.03 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 78.37 அடியாக மட்டுமே உயர்ந்துள்ளது.இதனிடையே கர்நாடகாவில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் மழை அந்த பகுதியில் நீடித்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வ ரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப் பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/continued-decline-in-water-inflow-to-hogenakkal-and-mettur-dam




