கான்பெரா, ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்பிற்காக சென்று, ஆரம்பத்தில் வேலை கிடைக்காமல் பீட்சா டெலிவரி செய்த இந்திய இளைஞர் ஒருவர், தனது விடாமுயற்சியால் 3 பீட்சா உணவகங்களுக்கு அதிபராக மாறியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை இந்தியாவைச் சேர்ந்த ஒரு வாலிபர், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதிக்கு உயர் கல்வி கற்பதற்காக சென்றார். படிப்பை முடித்த பிறகு, அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ற சரியான வேலை அங்கு உடனடியாக கிடைக்கவில்லை. இதனால், தனது வாழ்வாதாரத்தை நடத்தவும், அன்றாட செலவுகளை சமாளிக்கவும் அங்குள்ள ஒரு உள்ளூர் பீட்சா கடையில் முழுநேர டெலிவரி ஊழியராக பணியில் சேர்ந்தார். கடுமையான உழைப்பும் முதல் வெற்றியும் ஆரம்ப நாட்களில் அல்லும் பகலும் பாராமல் அவர் செய்த கடின உழைப்பு வீண் போகவில்லை. பீட்சா டெலிவரி வேலைக்கு சேர்ந்த 3 ஆண்டுகளிலேயே, தான் வேலை செய்த நிறுவனத்தின் வர்த்தக நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். பின்னர், மற்றொரு தொழில் கூட்டாளருடன் இணைந்து அதே பீட்சா நிறுவனத்தின் ஒரு புதிய கிளைக்கான உரிமத்தை விலைக்கு வாங்கினார். இதுவே அவரது தொழில்முறை வாழ்க்கையின் முதல் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கொரோனா கால சவால்களும் அசுர வளர்ச்சியும் இதனைத் தொடர்ந்து, உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் சவால்களைத் திறம்பட எதிர்கொண்டு தனது வணிகத்தை நிலைநிறுத்தினார். அந்த சமயத்தில் தனது சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு வந்து திருமணமும் செய்து கொண்டார். மனைவியுடன் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பிய அவர், தனது வியாபாரத்தை மேலும் விரிவாக்கம் செய்தார். அடுத்தடுத்து மேலும் 2 கிளைகளைத் தொடங்கி, தற்போது மொத்தம் 3 வெற்றிகரமான பீட்சா உணவகங்களின் உரிமையாளராக வலம் வருகிறார். ஆஸ்திரேலிய குடியுரிமை- சொகுசு வாழ்க்கை 11 வருட போராட்டத்திற்குப் பிறகு, அண்மையில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆஸ்திரேலியக் குடியுரிமை கிடைத்துள்ளது. அவர் ஆஸ்திரேலியாவில் சொந்தமாக ஒரு பிரம்மாண்ட வீடு வாங்கியுள்ளார். உலகத் தரம் வாய்ந்த சொகுசு பிஎம்டபுல்யூ (BMW) காரையும் வாங்கியுள்ளார். இதுமட்டுமின்றி, இந்தியாவின் ஹைதராபாத்திலும் தனது குடும்பத்திற்காக ஒரு புதிய வீட்டைக் கட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரல் இந்த அசாத்திய வெற்றிக் கதையை அவரது மைத்துனரும், தொழிலதிபருமான வினீத் கே என்பவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். "ஆரம்ப நாட்களில் அவர் மிகக் கடுமையாக உழைத்தார். பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி, இப்போது அவர் அடைந்துள்ள இந்த வெற்றியும், கடந்து வந்த பாதையும் பார்ப்பதற்கே மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். முறையான கல்விப் பின்னணி இருந்தாலும், அடிமட்ட வேலையிலிருந்து தொடங்கி விடாமுயற்சியாலும் உழைப்பாலும் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த இந்திய வாலிபரின் வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. இணையவாசிகள் பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/from-pizza-delivery-boy-to-entrepreneur-indian-youth-making-waves-in-australia




