சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் குறைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் நேற்று குறைந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-by-rs-240-per-sovereign




