சென்னை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- வாழ்த்து ஜப்பானில் நடைபெற்று வரும் இருபதாம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிஷின் நகரில் இன்று நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் இறுதியாட்டத்தில் இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப்பதக்கம் பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீராங்கனை குணாளன் கமலினிக்கும் வாழ்த்துகள். வலிமையான அணி அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்திருப்பதன் மூலம் ஆசியாவின் வலிமையான அணி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/asian-games-gold-congratulations-to-indian-womens-cricket-team-from-anbumani




