புதுடெல்லி, உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட வணிக கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. 10 மாலுமிகள் உயிரிழந்தனர். இதில் நான்கு பேர் இந்தியர்கள் ஆவார்கள். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இந்தியாவுக்கான ரஷிய தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியா சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளது. கடும் கண்டனம் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதரக பொறுப்பாளர் விளாடிமிர் டேலனவ்-க்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவர் இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சகத்திற்கு வந்து ஆஜரானார். அப்போது அவரிடம் இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமையன்று எம்.வி. கோல்டன் லியோ (MV Golden Leo) என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து. இந்தியா தனது கடுமையான கவலையையும் தெளிவான கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச கடல்வழி வர்த்தகத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கின்றன என வலியுறுத்தப்பட்டுள்ளது. தீவிர கவலை வணிகக் கப்பல்களை குறிவைப்பதும், அதனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் தீவிர கவலைகளைத் தங்கள் நாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு ரஷ்யத் தூதரகப் பொறுப்பாளர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/india-summons-russian-ambassador-over-sailors-deaths




