சென்னை, 8 அணிகள் பங்கேற்கும் 10-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட ஆட்டங்கள் (4-15) திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள் (18-28) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடக்கிறது. இந்த தொடரின் முதல் கட்ட ஆட்டங்களுக்கான நேரடி டிக்கெட் விற்பனை நத்தம் என்.பி.ஆர். கல்லூரி நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட கவுண்ட்டரில் இன்று தொடங்குகிறது. தினசரி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர District.in இணையதளம் மற்றும் செயலி வாயிலாகவும் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெற்றுகொள்ளலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-cricket-direct-ticket-sales-start-today




