பிரபல திரைப்பட நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றங்களை சட்டமன்றத் தொகுதி வாரியாக வலுப்படுத்தவும், உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். முதற்கட்டமாக கோவையில் தனுஷ் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் சுப்பிரமணிய சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நற்பணி இயக்கங்கள் தொடங்கி, உறுப்பினர்கள் சேர்க்கைகளை அதிகரிக்க வேண்டும். தலைவர் வழியில் ஒன்றுபட்டு அனைவரும் செயல்படுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் அரசியலில் களம் இறங்குவதற்கான முன்னோட்டமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் கோவையைக் குறிவைத்து தனுஷ் தனது அரசியல் பயணத்தைத் துவங்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து தனுஷ் ரசிகர்களிடம் பேசியபோது, “தற்போது தமிழ்நாடு முழுக்க 55 மாவட்டங்களில் தலைமை மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்த தானம் செய்தல், அன்னதானம் செய்தல், கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகின்றன. தனுஷ் ’கோவையில் ரசிகர்கள் அதிகம்’ மற்ற மாவட்டங்களை விட கோவையில் தனுஷுக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ரசிகர்களே உள்ளனர். சமீபவத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக தனுஷ் கோவை வந்தபோது, அவரைக் காண 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர். ஏற்கனவே பலமாக இருக்கும் பகுதியை மேலும் வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு நடிகர் விஜய் முடிவுரை எழுதிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால், இது இதற்கு முன்னரே சாத்தியமாகி இருக்கும். இன்று தி.மு.க, அ.தி.மு.க-வில் மக்களை ஈர்க்கும் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை. பணம் கொடுத்துதான் மக்களை கட்சி நிகழ்ச்சிகளுக்கே அழைத்து வருகிறார்கள். தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும்தான் அரசியல் போட்டி என்ற சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மாற்றாக வேறு யாரும் இல்லை. அந்த வெற்றிடத்தை தனுஷ் நிரப்புவார்” என நம்பிக்கை தெரிவித்தனர். இரா.முருகவேள் கமல்ஹாசன் பாணியில் தனுஷ்? நடிகர் கமல்ஹாசன், அண்ணாமலை ஆகியோரைப் போல கோவையை மையப்படுத்தி தனுஷ் அரசியல் செய்ய உள்ளரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான இரா.முருகவேள், “கோவையை உள்ளடக்கிய கொங்கு பகுதியில் வலுவாக இருந்த அ.தி.மு.க, தற்போது வலுவிழந்துவிட்டது. அந்த இடத்தை தி.மு.க, த.வெ.க-வால் பிடிக்க முடியவில்லை. அண்ணாமலை வெளியேற்றத்தால் பா.ஜ.கவும் வலுவிழந்து உள்ளது. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பிடிக்க முயல்கிறார்கள். சென்னையில் நிறைய சிறிய, சிறிய கட்சிகள் கூட வலுவாக உள்ளன. அங்கு த.வெ.க வலுவாகக் காலூன்றிவிட்டது. ஆனால் சென்னைக்கு வெளியே அதிக தொழில்கள், பணம், அதிகாரம், அரசியல் செல்வாக்கு உள்ள பகுதி கோவைதான். அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகளிடம் பெரிய போட்டியும் இருக்காது என்பதால், புதிய கட்சிகள் கோவையைக் குறிவைக்கின்றன” என்றார். இது குறித்து மாவட்டத் தலைவர் சங்கரிடம் விளக்கம் கேட்டோம். “ஏற்கனவே 20 ஆண்டுகளாக ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. புதிய மன்றங்கள் பதிவுகளுக்காகவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் செய்கிறோம். வேறு ஒன்றும் இல்லை. இது அரசியலுக்கான முன்னோட்டம் இல்லை. தலைமை எடுக்கும் முடிவிற்குக் கட்டுப்பட்டு நடப்போம்” என்றார். 'தொகுதிப் பொறுப்பாளர்களை நியமிக்கலை, ஆனா.' - அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/what-is-reason-behind-actor-dhanush-strengthening-his-fan-club-in-coimbatore




