மதுரை, தமிழக முதல்-அமைச்சர் விஜய், இன்று மதுரையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். இது குறித்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;- “தமிழக முதல்-அமைச்சர் விஜய் அனைத்து சமய கடவுள்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். அனைத்து சமயங்களை பின்பற்றக்கூடிய மக்கள் மீதும் முதல்-அமைச்சர் விஜய் அன்பு வைத்துள்ளார். அதைத்தான் இன்று நாம் பார்த்தோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் திருப்தியாக சாமி தரிசனம் செய்தார். மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் வழிபட்டு கடவுளின் அருளைப் பெற்றார். தமிழக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், தமிழ்நாடு நன்றாக இருக்கணும் என்பதுதான் அவரது எண்ணம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-holds-affection-for-people-of-all-faiths-minister-arunraj




