கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் அஷ்மிதா சாலிஹா, ரஷிதாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டினார். அசன், கொரியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் அசன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 50-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா. சக நாட்டவரும், 49-ம் நிலை வீராங்கனையுமான ரக்ஷிதா ராம்ராஜை எதிர்கொண்டார். 48 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் அஷ்மிதா சாலிஹா 21-13, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் ரஷிதாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டினார். மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 35-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை ஹன் கியான் ஜி 22-20, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் கிம் கா ராமை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அஷ்மிதா சாலிஹா-ஹன் கியான் ஜி மோதுகிறார்கள். Into the Finals! Ashmita Chaliha delivers a stellar performance at the HSBC World Tour Super 300 Korea Masters 2026, battling through a thrilling three-game semi-final against Rakshitha Ramraj (21–13, 16–21, 21–13) to secure her spot in the summit clash! ✨ — BAI Media (@BAI_Media) August 8, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/othersports/ashmita-chaliha-reaches-maiden-bwf-world-tour-final-at-korea-masters




