35வது பட்டமளிப்பு விழாவில் 5,644 மாணவர்கள் பட்டம் பெற்றனர்; 55 பேருக்கு தங்கப் பதக்கமும், 4,002 பேருக்கு வளாக வேலைவாய்ப்பும் கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். 35 வது பட்டமளிப்பு விழாவில், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 4712 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கும், 932 முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கும், 116 பிஎச்டி மாணவர்களுக்கு டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் வழங்கினார். சாதனை மாணவர்கள் 55 பேருக்கு தங்க மெடல்கள் என மொத்தம் 5644 மாணவர்கள் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றனர். இதில் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் 4002 மாணவர்கள் வேலை வாய்ப்பிற்கான பணி ஆணையை பெற்றனர். வேலை வாய்ப்பு:- சத்தியபாமா தொடர்ந்து கேம்பஸ் தேர்வில் அதிகபட்ச மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருகிறது. சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2025- 2026 கல்வி ஆண்டில் சுமார் 450 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின. இதில் மொத்த மாணவர்களில் 93.12 % மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்த மாணவர்கள் ஆண்டுக்கு அதிகபட்ச ஊதியம் 41,20,000, குறைந்தபட்ச ஊதியமாக 5,73,000 தேர்வு செய்யப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/advertorial/sathyabama-university-35th-convocation-2026




