தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி அருகே தொழிலாளர்களைத் தாக்கி, சாதிப் பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசியது மற்றும் கல்லால் தாக்கியது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். கயத்தாறு தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வடக்குக்கோனார் கோட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்த வேல்சாமி மகன் சண்முகராஜ் (வயது 20). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் பைக்கில் வீட்டுக்குச் சென்றபோது, சாலையில் நின்று கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த சிலர் உள்பட 6 பேரிடம் ஓரமாக நிற்குமாறு கூறியுள்ளார். 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் சண்முகராஜின் சாதிப் பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் காயமடைந்த சண்முகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 16 வயதுடைய 2 பேர் மற்றும் 17 வயதுடைய ஒருவர் என 3 சிறுவர்களை கைது செய்தனர். கோவில்பட்டியில் தொழிலாளி மீது கல்லால் தாக்குதல் கோவில்பட்டி அருகே வி.நாச்சியார்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விக்னேஷ்(26), விவசாயத் தொழிலாளி ஆவார். இவர் தனது நண்பர் ரமேஷுடன் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தபோது, காளாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் கூசாலிப்பட்டியைச் சேர்ந்த அஜித்(எ)சூர்யா ஆகியோர் விக்னேஷை அவதூறாகப் பேசி கல்லால் தாக்கினர். வாலிபர் கைது அதை தட்டிக்கேட்ட ரமேஷுக்கும் கொலை மிரட்டல் விடுத்து அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த விக்னேஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்(எ) சூர்யாவை(30) கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-4-people-including-children-arrested-for-threatening-to-kill-by-attacking-with-stones




