புதுடெல்லி, ஏ.ஐ. மென்பொருள் சந்தையில் புதிய புரட்சி படைக்கும் வகையில் 'ஜியா சாட்' உரையாடும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி ஜோஹோ சாதனை படைத்துள்ளது. போட்டியாக உருவெடுத்த ஜோஹோ உலகளவில் மிக பிரபலமான இந்திய மென்பொருள் நிறுவனமாக ஜோஹோ உள்ளது. தஞ்சையை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோரால் 1996-ம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் சென்னைக்கு அருகில் உள்ள மறைமலைநகரில் அமைந்துள்ளது. கூகுள், மெட்டா உள்ளிட்ட அமெரிக்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிகராகவும், எச்.சி.எல்., இன்போசிஸ், விப்ரோ என உள்ளூரில் அதிக முதலீட்டில் நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு போட்டியாகவும் ஜோஹோ உருவெடுத்துள்ளது. 2011-ம் ஆண்டு கிராமப்புற பகுதியில் இருந்தும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமிட முடியும் என தெரிவிக்கும் வகையில் தென்காசி இலஞ்சி மற்றும் மத்தளம்பாறையில் ஜோஹோ நிறுவனத்தின் கிளைகளை உருவாக்கி பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இமாலய மைல்கல் வணிக நிறுவனங்கள் தங்களின் அன்றாட வேலைகள், வாடிக்கையாளர் மேலாண்மை, கணக்கு வழக்குகள் மற்றும் மனிதவள மேலாண்மை போன்றவற்றை எளிதாக கையாளத் தேவையான 55-க்கும் மேற்பட்ட ஆன்லைன் மென்பொருட்களை ஜோஹோ வழங்குகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்பட உலகம் முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்கள் ஜோஹோ மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். உலகளாவிய மென்பொருள் ஜாம்பவானாக உயர்ந்துள்ள ஜோஹோ, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் மற்றுமொரு இமாலய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜியா சாட் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன சேவைகளை வழங்கும் நோக்கில், 'ஜியா சாட்' என்ற புதிய ஏ.ஐ. உரையாடும் இடைமுக செயலியை (சாட் இன்டர்பேஸ்) வசதியை ஜோஹோ அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், குறிப்பிட்ட தொழில்துறைகளுக்கான சிறப்பு மென்பொருள் சந்தையான 'வெர்டிகல் சாஸ்' பிரிவிலும் ஜோஹோ அதிகாரப்பூர்வமாக தடம் பதித்துள்ளது. இதற்காக உற்பத்தி, சுகாதாரம், கல்வி, நிதி உள்ளிட்ட 7 முக்கிய தொழில்துறைகளுக்கான சிறப்பு செயலிகளை (அப்ளிகேஷன்) ஜோஹோ நிறுவனம் உருவாக்கியுள்ளது. மென்பொருள் சந்தையில் பரபரப்பு ஏ.ஐ. மென்பொருள் துறையில் ஏற்பட்டுள்ள இந்த புதிய புரட்சி குறித்து பேசிய ஜோஹோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, "இனி நிறுவனங்கள் தங்களின் அன்றாட வணிகச் செயல்பாடுகளை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் மிக எளிதாக கையாள முடியும். தொழில்துறைகளின் தேவைக் கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட இந்த 7 செயலிகள், நிறுவனங்களின் உற்பத்தி திறனை பல மடங்கு உயர்த்தும்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து உலக அரங்கிற்கு சென்று சாதித்து வரும் ஜோஹோ நிறுவனத்தின் இந்த அதிரடி பாய்ச்சல், உலக மென்பொருள் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/zoho-launches-ai-interface-zia-chat-enters-vertical-saas-with-seven-industry-applications




