சென்னை, தமிழக சட்டசபையில் இன்று எரிசக்தி துறை சம்பந்தமாக, இந்திய தணிக்கை தலைவரின் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மின் உற்பத்தி நிலையங்களின் உண்மையான மின் உற்பத்தியை கணக்கிடாமல், அவற்றின் 'நிறுவுதிறன்' அடிப்படையில் டான்ஜெட்கோ கட்டணம் செலுத்தியதால், மின் வாரியத்துக்கு ரூ.342 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:– ரூ.342 கோடி இழப்பு மின் உற்பத்தி நிலையங்கள் உற்பத்தி செய்யும் உண்மையான மின்சார அளவை கணக்கில் கொள்ளாமல், அவற்றின் நிறுவுதிறன் அடிப்படையில் டான்ஜெட்கோ கட்டணம் செலுத்தி உள்ளது.உண்மையான உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தாமல், நிறுவு திறன் அடிப்படையில் கட்டணம் செலுத்தியதால் மின் வாரியத்துக்கு ரூ.342 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 'மின் இணைப்புகள்' வழியே கொண்டு செல்வதற்கும் டான்ஜெட்கோ தனியாக கட்டணம் செலுத்தியுள்ளது. வேலை செய்யாததற்கு கட்டணமா? தமிழகத்தில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் அவற்றின் மொத்த உற்பத்தி திறனில் 26 சதவீதம் முதல் அதிகபட்சமாக 87 சதவீதம் வரை மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. ஆனால், மின் உற்பத்தி மிக குறைவாகவே இருந்தபோதும், 100 சதவீத முழு உற்பத்தி திறனும் நடந்தது போன்ற டான்ஜெட்கோ கட்டணம் செலுத்தி உள்ளது.இப்படி வெறும் 4 மின் உற்பத்தி நிலையங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.342 கோடி அளவுக்கு இமாலய கட்டண இழப்பு ஏற்பட்டு உள்ளது. தனியாரிடம் கூடுதல் விலைக்கு கொள்முதல் கடந்த ஆட்சி காலங்களில் மாநிலத்தின் மின் தேவை அதிகரித்தது. ஆனால், அதற்கு ஏற்ப தமிழக அரசின் சொந்த மின் உற்பத்தி திறன் தொடர்ந்து குறைந்தபடியே இருந்துள்ளது. இந்த மின்தேவை இடைவெளியை பூர்த்தி செய்ய, தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரசின் மின் உற்பத்தி நிலையங்களை முறையாக பராமரித்து, முழு உற்பத்தி திறனை பயன்படுத்த தவறியதே இதற்கு காரணம் என தணிக்கையில் சாடப்பட்டுள்ளது. சொந்த நிலையங்களை பராமரிக்காமல், தனியாருக்கு சாதகமாக கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2018 முதல் 2023 மார்ச் வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-audit-report-rs-342-crore-loss-tangedco




