முதல்-அமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ‘தலைவா’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'Time to lead' என்கிற வாசகம் அடங்கிய புகைப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய், முதல்-அமைச்சர் விஜய்க்கு வழங்கினார். ஸ்ரீ மிஷ்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘தலைவா’. இப்படத்தில் அமலா பால், சத்யராஜ், சந்தானம், நாசர், பொன்வண்ணன், அபிமன்யு சிங் மற்றும் ராகினி நந்தவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த ‘தலைவா’ திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் போஸ்டர்களில் 'Time To Lead' (தலைமை தாங்க வேண்டிய நேரம்) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. அந்த சமயத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடும் என்ற பேச்சு அடிபட்டதால், இந்த வாசகம் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவை நேரடியாக எதிர்ப்பது போல் உள்ளதாகக் கூறி, மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக ‘தலைவா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளுக்கு மர்ம நபர்கள் கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது. இந்த பாதுகாப்பு காரணங்களை கூறி, அன்றைய தமிழ்நாடு அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்தது. அதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை திரையிட மறுத்தனர். ‘தலைவா’ திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாட்டில் வெளியாகாத காரணத்தால், தயாரிப்பாளர் தரப்பிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து, படத்தின் கதாநாயகன் விஜய் அன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சரான ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்த போது, வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த சூழ்நிலையில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்ட விஜய், “தனக்கும், தனது திரைப்படத்திற்கும் முதலமைச்சர் ஜெயலலிதா உதவ வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ‘தலைவா’ திரைப்படம் ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியானது. ‘Time To Lead' என்ற டேக்-லைன் படத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த கத்தி, மெர்சல் ஆகிய திரைப்படங்கள் பல சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய் முதல்-அமைச்சரான பின்பு இயக்குநர் ஏ. எல். விஜய் அவரை நேரில் சந்தித்து ‘தலைவா’ திரைப்படத்தில் இடம்பெற்ற, 'time to lead' வாசகத்துடன் விஜய்யின் பிரபலமான தோற்றத்தைக் கொண்ட புகைப்படத்தை வழங்கியுள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/director-vijay-meets-chief-minister-vijay-with-thalaivaa-film




