புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தின் போது, தடியடியில் இருந்து தப்பிக்க இளைஞர் ஒருவர் ஆடைகளுக்குள் தெர்மாகோல் துண்டுகளை வைத்து வினோதமான முறையில் தயாராகும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. வினோத தற்காப்பு டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நேற்று அதிரடி போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக இளைஞர் ஒருவர் புதுமையான முறையில் தயாரானார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் 'அவசர பாதுகாப்பு கருவி' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போராட்டத்தில் ஒருவேளை போலீசார் தடியடி நடத்தினால், அதில் இருந்து தனது உடலைப் பாதுகாத்துக் கொள்ள ஆடைகளுக்குள் ஆங்காங்கே தெர்மாகோல் துண்டுகளை வைத்து நூதன முறையில் ஆடை அணிந்துள்ளார். கையில் பூங்கொத்து பலத்த அடிபடுவதில் இருந்து தலையைப் பாதுகாக்க ஹெல்மெட் அணிந்துள்ள அந்த இளைஞர், கையில் ஒரு அழகான பூங்கொத்தையும் கையில் ஏந்தியபடி போராட்டத்திற்கு புறப்படுகிறார். வன்முறையை தவிர்த்து அமைதியை வலியுறுத்தவே கையில் பூங்கொத்துடன் செல்வதாக அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 12 லட்சம் போலீஸ் தடியடியில் இருந்து தப்பிக்க இளைஞர் கையாண்ட இந்த வித்தியாசமான ஐடியா மற்றும் தற்காப்பு வீடியோ தற்போது இணையதளங்களில் நெட்டிசன்களால் பயங்கரமாக ஷேர் செய்யப்பட்டு, பெரும் வைரலாகி வருகிறது. வீடியோவுக்கு 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதுடன், மேலும் பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/delhi-protest-unique-self-defence-young-man-viral-video




