கொல்லம், கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய தாய் சின்னத்தம்மா (வயது 90). வயது முதிர்வு காரணமாக படுத்த படுக்கையாக இருந்த சின்னத்தம்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். அதிர்ச்சி தகவல் தாயின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கிருஷ்ணசாமி, அதுகுறித்து யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக மறைத்துள்ளார். சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க, தினமும் ஈரத்துணியால் உடலை துடைத்து, அதன் மேல் பவுடர் பூசி, வெள்ளை துணியால் மூடி வைத்துள்ளார். மேலும், தாயின் சடலத்தை தெய்வமாக நினைத்து, அதற்கு தினமும் பூஜைகள் மற்றும் சடங்குகளை செய்து வழிபட்டு வந்துள்ளார். மகள் கொடுத்த புகார் இந்நிலையில், கிருஷ்ணசாமியின் மகள் தனது பாட்டியை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே பாட்டி சடலமாக கிடப்பதை கண்டு அலறியடித்தார். இதுகுறித்து உடனடியாக குளத்துப்புழா போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கிருஷ்ணசாமி கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணசாமியை மீட்டு மனநல சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/son-performs-rituals-with-dead-mother-body




