தாராபுரம், திமுக தலைவர் ஸ்டாலினை ஸ்வீட் அங்கிள் என்கிறார் முதல்-அமைச்சர் விஜய். இனிமேல் அவரை அன்பு தம்பி என்று தான் அழைப்பேன் என்று திமுக எம்.பி,.கனிமொழி கூறியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென திமுக, அதிமுக, தவெக கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதே நேரம் நாம் தமிழர் கட்சியும், இடதுசாரிகளும் தனித்து களமிறக்கும் காரணத்தால் 5 முனை போட்டி நிலவி வருகிறது. இது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலை மேலும் சுவராஸ்யமாக்கி உள்ளது. கனிமொழி எம்பி இதனிடையில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை சார்ந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் இடைத்தேர்தலுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இனி அன்புத் தம்பி இந்தநிலையில், தாராபுரத்தில் திமுக எம்பி கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- இதுவரை சத்தியபாமா தீர்ந்து போன சக்தி, ஆனால் தவெகவில் சேர்ந்ததால் தங்கை சத்தியபாமா ஆகிவிட்டார். திரும்ப திரும்ப தூய சக்தி, தீய சக்தி; இதையை தான் முதலமைச்சர் விஜய் சொல்கிறார். இப்போது நமக்கு சொந்தக்காரர்; ஏனென்றால் அவர் தலைவர் ஸ்டாலினை ஸ்வீட் அங்கிள் என்கிறார். இனிமேல் அவரை அன்பு தம்பி என்று தான் அழைப்பேன் என்றார். தனுஷே வந்துட்டார் “வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4000 தருவேன் எனக் கூறி முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்தார். ஆனால் யாருக்கும் தரவில்லை ரூ.4000 வரல, ஆனா வேலையில்லாத பட்டதாரி தனுஷே அரசியலுக்கு வந்துட்டார் என்றார். தம்பி விஜய் அவர்களே. "மக்களை தொடர்ந்து ஏமாற்றி விடலாம் என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறார் தம்பி விஜய் அவர்களே, இந்த நாடகம், இந்த ரீல்ஸ், இந்த சினிமா ஷூட்டிங் எல்லாம் தமிழ்நாட்டில் ரொம்ப நாளைக்கு ஓடாது தம்பி. உண்மையான தீய சக்தி, மக்களுக்கு தூரமான சக்தி, தூர்ந்து போன சக்தி யார் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தனது கட்சியின் வேட்பாளர் மரகதம் குமரவேலுவுக்கு ஆதரவாக மதுராந்தகத்தில் முதல்-அமைச்சர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், வழக்கம்போல் தி.மு.க. குறித்து பல அடுக்ககடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசிய விஜய், அவர் எப்போது எனது ஸ்வீட் அங்கிள் தான் என்று குறிப்பிட்டிருந்தார். விஜயின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-loves-me-tambu-dmk-mp-kanimozhi-speaks-during-campaign




