திருச்சி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இறுதி கட்ட பிரசாரத்திற்காக தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரத்தில் முதல்-அமைச்சர் விஜய் இன்று 'ரோடு ஷோ' மேற்கொள்கிறார். இந்நிலையில், முதல்-அமைச்சரின் பிரசாரம் குறித்து திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது;- “தமிழ்நாட்டை நேர்வழியில் எடுத்துச் செல்லக்கூடிய, ஊழலற்ற ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முதல்-அமைச்சர் விஜய், இன்று தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக ‘ரோடு ஷோ’ நடத்த உள்ளார். அவரை காண்பதற்காக மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இடைத்தேர்தலில் த.வெ.க. பெறும் வெற்றியானது, தமிழகத்தின் வரலாற்றில் இடம்பெறக்கூடிய வரலாற்று வெற்றியாக அமையும். மற்ற தேர்தல்களை காட்டிலும் இந்த தேர்தல் ஒரு திருப்புமுனையை உருவாக்கும். அடுத்த இடைத்தேர்தலில் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ போட்டியிடாத அளவிற்கு த.வெ.க. வெற்றி வாகை சூடும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-trp-will-achieve-a-historic-victory-in-the-by-elections-minister-sengottaiyan




