டெல்லி, இந்தியா, நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் முதல் அமலாக உள்ளது. வர்த்தக ஒப்பந்தம் இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா, நியூசிலாந்து இடையே கடந்த ஏப்ரல் 27ம் தேதி தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதி வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கும் முழுமையாக இறக்குமதி வரியை இந்தியா ரத்து செய்துள்ளது. மேலும், நியூசிலாந்து இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் 19 இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய தொழில் நிறுவனங்கள் அதிக பயன்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/india-new-zealand-trade-pact-likely-to-come-into-force-from-oct-19-official




