ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்கள் மூலம் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார். அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யவன்ஷி பெஞ்சில் அமரவைக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. வைபவ் சூர்யவன்ஷி இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நடைபெறவுள்ள நிலையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யவன்ஷியை பெஞ்சில் அமரவைக்கப்பட்டது குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேள்வி கேட்கபட்டது. அதற்கு பதிலளித்த அவர், "என்னுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன. இது மிகவும் தனிப்பட்ட விஷயம். அணிக்குள் விவாதிக்கப்பட வேண்டிய ரகசியமான விஷயம் இது. நாங்கள் எந்த வீரர்களைக் களத்திற்கு அனுப்புகிறோம் என்பதையோ, என்ன நடக்கப்போகிறது என்பதையோ எதிரணிக்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஸ்ரேயாஸ் ஐயர் அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த வீரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதும் முக்கியம். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். தனி நபரின் செயல்பாட்டை மட்டுமே பார்க்க முடியாது. ஆனால் சூர்யவன்ஷி ஒரு திறமைசாலி. அவருக்கு எப்போது இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்" என்று கூறியிருக்கிறார். சச்சின் சாதனையை முறியடித்த 15 வயது புயல்... வைபவ் சூர்யவன்ஷி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://sports.vikatan.com/cricket/shreyas-iyers-reply-on-not-picking-vaibhav-sooryavanshi-for-india-vs-ireland-t20



