சாத்தூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஆடிப் பெருந்திருவிழாவான பிரம்மோற்சவ திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் விழாவை முன்னிட்டு இன்று அதிகாலையில் 3 மணிக்கு அம்மனுக்கு பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர் உள்ளிட்ட 21 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இன்று மதியம் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான ரிஷப வாகன வீதியுலா நடைபெற்றது. இந்த வருடம், நத்தத்துப்பட்டி கிராம பொதுமக்கள் அம்மனை ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்து சீர்பாதம் தாங்கி பவனி வர செய்கிறார்கள். இருக்கன்குடி முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன், அர்ஜுனா நதியை கடந்து ஆலயத்தை சுற்றி வலம் வந்து கொலுமண்டபத்தை வந்தடைவார். நேர்த்திக்கடன் பிரம்மோற்சவ விழாவையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்தும், தொட்டில் குழந்தை, அங்கப் பிரதட்சணம், அலகு குத்துதல், முடிகாணிக்கை, பொங்கல் வைத்தல் என பல்வேறு வகைகளில் அம்மனுக்கு நேர்க்கடன் செலுத்தியவண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறை சார்பில் தயார் நிலையில் வாகனமும், 24 மணி நேர மருத்துவ ஆம்புலன்ஸ் வசதியும் தயார் நிலையில் உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிதண்ணீர், கழிப்பிட வசதி, குளியலறை, தங்குமிடம் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/aadi-velli-rituals-at-irukkankudi-devotees-carrying-fire-pots-and-piercing-their-bodies-with-skewers




