தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் 3.5 சவரன் தங்க செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ்நகர் ஈ.பி. காலனி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேவியர் மனைவி அனிதா (வயது 45). இவர் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள காசி அம்மன் கோயில் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். பெண்ணிடம் 3.5 சவரன் தங்க செயின் பறிப்பு அப்போது அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், அனிதா எதிர்பாராத நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3.5 சவரன் எடையுள்ள தங்கச் செயினை திடீரென பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு இதுகுறித்து அனிதா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/35-sovereign-gold-chain-snatched-from-woman-police-launch-net-to-nab-mysterious-persons




